பழனி ரோப் கார் சேவை - மீட்பு ஒத்திகை
பதிவு: ஆகஸ்ட் 27, 2018, 07:01 PM
பழனி முருகன் கோயிலில், மலைக்கு செல்லும் ரோப் கார் திடீரென நடுவழியில் நின்றால் பக்தர்களை எப்படி மீட்பது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கயிற்று ஏணியில் மூங்கில் கூடை மூலம் பக்தர்களை மீட்பது போல் ரோப் கார் ஊழியர்கள் செய்து காண்பித்தார். இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.