திருச்செந்தூர் அருகே முக்காணியில் ரூ.29.75 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணை
பதிவு: ஆகஸ்ட் 25, 2018, 09:44 AM
 திருச்செந்தூர் அருகே முக்காணியில் தாமிரபணி குறுக்கே 29 கோடியே 75 லட்சம் செலவில் தடுப்பணைக் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரள வெள்ளம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த  கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் புதிதாக கட்டப்பட்டு வந்த தடுப்பணையின் தடுப்புச் சுவரின் மத்திய பகுதியில் விரிசல் ஏற்பட்டு சரிந்தது. இதனை ஒப்பந்தக்காரர்கள் சரி செய்து வருகின்றனர். தவறுகள் கண்டு பிடிக்கப்பட்டு பொதுப்பணித்துறையினர் மீதும், ஒப்பந்தகாரர்கள் மீதும் உரிய நடவடிகை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.