"கொள்ளிடம் பழமையான ஆற்றுப்பாலத்தை இடிக்க வேண்டாம்" - பொதுமக்கள் கோரிக்கை
பதிவு: ஆகஸ்ட் 21, 2018, 10:58 AM
திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுப்பாலம், இடிந்து விழும் தருவாயில் உள்ளதால், அதில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 90 ஆண்டுகள் பழமையான கொள்ளிடம் பாலம் அருகே பாய்ந்தோடும் நீரை பார்க்க ஏராளமானோர் குவிந்த வண்ணம் உள்ளனர்.தண்ணீர் பெருக்கு குறைந்ததும்,பாலத்தை இடிக்க,மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில்,கொள்ளிடம் பாலத்தை இடிக்கும் முடிவை கைவிடுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.