கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக 5 கோடி ரூபாய் வழங்கப்படும் - முதலமைச்சர் பழனிச்சாமி

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக 5 கோடி ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Update: 2018-08-19 02:07 GMT
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 10-ம் தேதி நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 5 கோடி ரூபாய் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு கேரளாவுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் வெள்ள பாதிப்பினை கருத்தில் கொண்டு கூடுதலாக 5 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

500 மெட்ரிக் டன் அரிசி, 300 மெட்ரிக் டன் பால் பவுடர், 15 ஆயிரம் லிட்டர் பதப்படுத்தப்படுத்தப்பட்ட பால், வேட்டிகள், கைலிகள், 10 ஆயிரம் போர்வைகள், மருந்துகள் மற்றும் மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்