சிறுவர்களை கடத்தி சென்ற பெண்ணை விரட்டி பிடித்த பொதுமக்கள்
பதிவு: ஆகஸ்ட் 18, 2018, 08:40 AM
திருவாரூர் மருத்துவமனையில் ரங்கராஜ் என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்க்க அவரின் பேரன்கள் ராகுல் மற்றும் ராஜேஷ்  சென்றுள்ளனர். அங்கிருந்த குமுதா என்ற பெண்ணிடம் தனது இரண்டு மகன்களையும் பார்த்துக்கொள்ளுமாறு கூறிய அவர்களின் தாய்  கழிவறைக்கு சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட குமுதா இரண்டு சிறுவர்களையும் அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சிறுவர்களின் பாட்டி குழந்தைகளை அழைத்து செல்வது பற்றி கேட்டவுடன், குழந்தைகளை குமுதா  விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார். அவரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தைகளை கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.