கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் பாதையில் மண் சரிவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் 2வது நாளாக ஏழு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-08-16 08:03 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் மார்க்கமாக 2வது நாளாக  ஏழு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை,  பெருஞ்சாணி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பரளியாறு,  குழித்துறையாறு, வள்ளியாறு,  கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கன மழை காரணமாக நேற்று காலை நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் மார்க்கத்தில் இரணியல் அருகே மண் சரிவு ஏற்பட்டது.  இதனால் 15 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்