தடையை மீறி விற்கப்படும் மதுபானங்கள் - பொதுமக்கள் அதிர்ச்சி
பதிவு: ஆகஸ்ட் 15, 2018, 07:29 PM
சுதந்திர தினத்தை ஒட்டி, மதுபான கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மது விற்பனை நடைபெற்று வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக பெருமாநல்லூர் அருகே உள்ள கடையில், மதுபானங்கள் ஜோராக விற்கப்பட்டு வருகிறது. சாலையில் நடந்து செல்வோரையும் அழைத்து, மது பானங்கள் விற்கப்பட்டு வருவது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து போலீஸில் புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.