பிளஸ் - டூ முடித்துவுடன் வேலை வாய்ப்பு - அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் உறுதி
பதிவு: ஆகஸ்ட் 14, 2018, 10:02 PM
* பிளஸ் - டூ முடித்துவுடன் வேலை வாய்ப்பை பெறும் வகையில் புதிய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

* ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தமிழகத்திலேயே முதன்முறையாக அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிஜிட்டல் நூலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது இந்த தகவலை வெளியிட்டார்.

* எனவே, எதிர்காலத்தில், படித்து விட்டு வேலை இல்லாமல் இருப்பவர் இந்த நாட்டில் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.  

* பொறியியல் பட்டம் பெற்றவர்களில், 80 லட்சம் பேருக்கு நாட்டில் வேலை இல்லை என்றும், தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வேலை இல்லாமல் தவித்து வருவதாகவும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.