வாழ்வதற்கு ஏற்ற இந்திய நகரங்களின் பட்டியலில் திருச்சிக்கு 12-வது இடம்

மத்திய வீடு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில், வாழ்வதற்கு ஏற்ற இந்திய நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2018-08-14 13:19 GMT
* மத்திய வீடு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில், வாழ்வதற்கு ஏற்ற இந்திய நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

* சமூக பொருளாதார நிலை, உள்கட்டமைப்பு, அரசு நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய காரணிகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டியலில், புனே முதலிடம் பிடித்துள்ளது.

* இந்தப் பட்டியலின் முதல் பத்து இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த எந்த நகரமும் இடம்பெறவில்லை. 

* இந்தப் பட்டியலில், திருச்சி 12-வது இடத்திலும், சென்னை 14-வது இடத்திலும் உள்ளது.

* மொத்தம் 111 நகரங்கள் உள்ள இந்தப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மட்டும் மூன்று நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

* இதேபோல, கடைசி பத்து இடங்களில் பீஹார் தலைநகர், நாகலாந்து தலைநகர் கொஹிமா உள்ளிட்ட நகரங்கள் உள்ளன.

* இந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி, 33-வது இடத்தில் உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்