"51,990 மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்"

பொறியியல் சேர்க்கையில், இதுவரை 4 சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில், 51 ஆயிரத்து 990 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

Update: 2018-08-14 11:04 GMT
இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைன் வழியிலான பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு அமலுக்கு வந்து,  கடந்த மாத இறுதியில் 5 சுற்று கலந்தாய்வுகள் தொடங்கியது.இதுவரை 4 சுற்று கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், மொத்தம் 51 ஆயிரத்து 990 மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.இறுதிகட்ட கலந்தாய்வு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. அதில், இன்னும் 10 ஆயிரம் பேர் வரை சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசு ஒதுக்கீட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், இந்த ஆண்டில் 70 ஆயிரத்திற்கும் குறைவாகவே சேர்க்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அனைத்து உயர்கல்வி படிப்புகளின் சேர்க்கை முடிந்த பின், தாமதமாக பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது மற்றும் ஆன்லைன் முறை போன்ற காரணங்களால் சேர்க்கை குறைந்ததாக கூறப்படுகிறது.இதற்கிடையே, துணை கலந்தாய்வு அட்டவணையை விரைவில் அண்ணா பல்கலை கழகம் வெளியிடுகிறது. அந்த கலந்தாய்வை, வழக்கமான முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்