கருணாநிதி நினைவிடத்தில் மக்கள் தொடர்ந்து அஞ்சலி : 93 வயதான பாட்டியும் கருணாநிதிக்கு அஞ்சலி
பதிவு: ஆகஸ்ட் 13, 2018, 10:22 AM
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மக்கள் தொடர்ந்து நேற்றும் நான்காவது நாளாக அஞ்சலி செலுத்தினர். விடுமுறை தினம் என்பதால் பொது மக்கள் திரளாக வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். தள்ளாடும்  வயதிலும் திருத்தணியில் இருந்து வந்த 93 வயதான பத்மாவதி என்ற மூதாட்டி நேரில் அஞ்சலி செலுத்தி சென்றார். கருணாநிதி நினைவிடம் மலர்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.