ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தங்க ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதி உலா

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழாவின் ஆறாவது நாள் நிகழ்ச்சியில் தங்க ரிஷப வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடந்தது.

Update: 2018-08-10 10:19 GMT
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழாவின் ஆறாவது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்,அம்பாள் பர்வதவர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து தங்க ரிஷப வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடந்தது.நான்கு ரத வீதியில் வந்த அம்பாள் பர்வதவர்தினியை பக்தர்கள் பலரும் தரிசித்தனர்.

ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் ஆடி பிரதோஷ விழா



கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் ஆடி மாத பிரதோஷ விழா நடைபெற்றது. இந்த விழாவில், சுவாமி சன்னதியில் உள்ள நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு  அபிஷேகங்கள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து உற்சவர் கும்பேஸ்வரர், நந்தி வாகனத்தில் எழுந்தருள பிரகார வீதியுலா நடைபெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடிப்பூர உற்சவம்- ஐந்து கருட சேவை




புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவத்தின், 5 ஆம் நாள் விழாவில், ஐந்து கருட சேவை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. பெரிய பெருமாள், சீனிவாச பெருமாள் உள்பட ஐந்து பெருமாள்கள் கருட வாகனத்திலும், ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் அன்ன வாகனத்திலும் முக்கிய வீதிகளில் பவனி வந்தனர். கருட சேவையை பார்க்க குவிந்த பெண்கள், பஜனை பாடியபடி கோலாட்டம் அடித்து, தெய்வங்களை வரவேற்று  வழிப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்