சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் தஹில் ரமாணி

மகாராஷ்டிர உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக உள்ள விஜயா கமலேஷ் தஹில் ரமாணி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2018-08-10 06:56 GMT
மகாராஷ்டிர உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக உள்ள விஜயா கமலேஷ் தஹில் ரமாணி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ள நிலையில், வரும் 12 ஆம் தேதி காலை, ஆளுநர் மாளிகையில் அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. ஆளுநர் பன்வாரி லால் புரோகித், தஹில் ரமாணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். 

கடந்த 1958 ஆம் ஆண்டு பிறந்த தஹில் ரமாணி, கடந்த 2001 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.  கடந்த 2017  டிசம்பர் 5 முதல் மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக அவர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்