சாலையில் உலா வந்த கரடி - புகைப்படம் எடுக்க முயன்ற பொதுமக்கள்
பதிவு: ஆகஸ்ட் 01, 2018, 06:27 PM
குன்னூர் அருகே தூதூர்மட்டம் தூரிப்பாலம் பகுதியில் சாலையில் கரடி ஒன்று உலா வந்தது. அரைமணி நேரத்திற்கு மேலாக அங்கிருந்து செல்லாமல் சாலையிலேயே கரடி நின்றது. அவ்வழியாக வந்த பொதுமக்கள் கரடியின் அருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்றனர். இதனால் கரடி அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. கடந்த சில தினங்களாக இரவில் நடமாடி வந்த கரடி, இன்று பகலிலும் நடமாடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.