அர்ச்சகர் நியமனம் : மு.க. ஸ்டாலின் வரவேற்பு...
மதுரை கோவிலில், பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமிக்கப்பட்டிருப்பதற்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.;
"திராவிட இயக்கத்தின் வரலாற்று சாதனை"
பல்வேறு போராட்டங்களை கடந்து, மதுரையில் உள்ள கோவிலில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பது, பெரியாரின் கனவை சட்டமாக்கிய தலைவர் கலைஞர் அவர்களுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி! இது திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனை! #TamilPrideKalaignar
— M.K.Stalin (@mkstalin) July 31, 2018