கல்வி கற்க 25 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவலம்

வேலூர் அருகே மலை கிராமங்களில் சாலை வசதி இல்லாததால் மாணவர்கள் கல்வி கற்க 25 கிலோ மீட்டர் தூரம் சென்று படிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

Update: 2018-07-26 11:57 GMT
வேலூர் அருகே அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட தெல்லை, ஜார்தான்கொல்லை, குண்டுராணி உள்ளிட்ட மலை கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது.உயர்கல்வி படிப்பதற்கு,  வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 25 கிலோ மீட்டர் நடந்து சென்று படிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் பலர் படிப்பை பாதியில் கைவிடுகின்றனர்.

மேலும், கர்ப்பிணி பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும், அவசர தேவைக்காகவும் சாலை, பேருந்து வசதி இல்லாததால் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்