தற்காலிக செவிலியர்களுக்கு 6 ஆயிரத்து 300 ரூபாய் சம்பளம் உயர்வு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு...

தற்காலிக செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு 7 ஆயிரத்து 700 ரூபாயில் இருந்து 14 ஆயிரமாக உயர்த்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-07-26 01:47 GMT
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள தகவலில், 

முதலமைச்சர் உத்தரவின் பேரில் தற்காலிக செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு 7 ஆயிரத்து 700 ரூபாயில் இருந்து 14 ஆயிரம் ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்கான ஆணையை முதலமைச்சர் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்ககப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு முன் தேதியிட்டு ஏப்ரல் 1, 2018 முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இவர்களுக்கு ஆண்டுதோறும் 500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொகுப்பூதியம் பெறும் 12 ஆயிரம் செவிலியர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது... 
Tags:    

மேலும் செய்திகள்