15 ஆயிரம் கி.மீ. நடைபயணம் மேற்கொள்ளும் ஜெயின் துறவி சென்னை வருகை

சென்னை மாதவரத்தில் நடைபெற்ற ஜெயின் சமூகத்தினர் நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார்.

Update: 2018-07-22 11:04 GMT
ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்களின் ஆன்மிக குரு ஆச்சாரியா ஸ்ரீ மஹாஸ் ரமண், கடந்த 2014ம் ஆண்டு, டில்லி செங்கோட்டையில் தனது அகிம்சை நடை பயணத்தை துவங்கினார். 3 நாடுகள், 19 மாநிலங்கள் வழியாக 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு அவர் பயணம் செய்கிறார். பயணத்தின் ஒரு பகுதியாக, சென்னைக்கு அவர் வந்துள்ளார். இதற்காக, சென்னை மாதவரத்தில் ஜெயின் சமூகத்தினர் சார்பாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய விழாவில் முதலமைச்சர் பழனிச்சாமி பங்கேற்றார். இன்றைய விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார். அவருக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்