ஜெயலலிதா இறந்த பின், புதிய அமைச்சரவை பற்றிய ஆலோசனை கூட்டம்

சசிகலா உறவினர்களும் இருந்ததாக ஆணையத்தில் தகவல்

Update: 2018-07-21 06:40 GMT
ஜெயலலிதா இறந்த அன்று புதிய அமைச்சரவை பற்றிய ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவின் உறவினர்களும் இருந்ததாக, விசாரணை ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா உதவியாளர் கார்த்திகேயனிடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை மேற்கொண்டனர்.
டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா இறந்த பிறகு, புதிய அமைச்சரவையை தேர்ந்தெடுக்கும் ஆலோசனை கூட்டத்தில் சசிகலா உறவினர்களும் இருந்தார்கள் என்பது சரிதானா? என வழக்கறிஞர்கள் கேட்டதற்கு கார்த்திகேயன் ஆமாம் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்