சென்னையில் அரசு அலுவலகத்தில் ரூ.4 கோடி பறிமுதல்

இது தொடர்பாக 4 பேரிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விசாரணை;

Update: 2018-07-19 11:06 GMT
சென்னை ஜெமினி மேம்பாலத்தின் கீழ் உள்ள அரசு அலுவலகத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை சென்னை கோட்ட பொறியாளர் இளங்கோவன் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  வருமானவரித்துறை கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்