முசிறி அருகே பழங்கால தொல்லியல் தடயங்கள்

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் களஆய்வில் பழங்கால தொல்லியல் தடயங்கள் கண்டுபிடித்துள்ளனர்

Update: 2018-07-06 06:15 GMT
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது மண்பறை என்ற பகுதியில் முதுமக்கள் தாழியின் உடைந்த பாகங்கள், மண்பாண்ட ஓடுகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த பகுதியில் அதிகளவில் படிவுப்பாறைகளும் அதன் சிதைவுகளும் காணப்படுவதால் கடற்பகுதியாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தொல்லியல் சார்ந்த பல பொருட்கள் இங்கு கிடைத்துள்ளதால் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும், இதனால் தமிழர்களின் முந்தைய நாகரீகம் வெளிச்சத்திற்கு வரும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்