105 போலி பாஸ்போர்ட்... கட்டு கட்டாக வெளிநாட்டு கரன்சி... தட்டி தூக்கிய போலீஸ்..!
சென்னை பன்னாட்டு விமான நிலைய குடியுரிமை அதிகாரி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதில், இந்தியாவை சேர்ந்த அந்தோணிசாமி என்பவர், போலி ஆவணங்கள் மூலம் இந்திய கடவுச்சீட்டு பெற்று மலேசியா செல்ல முயன்றதாக தெரிவித்தார். இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தோணிசாமியை கடந்த 7-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் ஏஜெண்டுகளை பற்றி விசாரணை மேற்கொண்டு, முக்கிய குற்றவாளியான முகமது புரோஷ்கான் என்பவரை, ராமநாதபுரத்தில் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த புதுக்கோட்டை ஆலங்குடியைச் சேர்ந்த சையது அபுதாஹிர் என்பவர் தலைமறைவானதும் தெரியவந்தது. புரோஷ்கான் மற்றும் சையது அபதாஹிர் வீட்டிலிருந்து சுமார் 105 பாஸ்போர்ட்கள், போலி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். புரோஷ்கான் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.