நாகை மீனவர்கள் 10 பேருக்கு சிறைக்காவல்

Update: 2023-08-08 02:39 GMT

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரை வரும் 21-ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அனுமதி பெற்று, இலங்கை திருகோணமலை கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி படகை சிறைப்பிடித்தனர். படகில் வந்த 10 மீனவர்களையும் கைது செய்து, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பயாஸ் ரசாக் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 10 பேரையும், வரும் 21-ஆம் தேதி வரை திருகோணமலை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்