U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், நாளை மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்க உள்ளது. பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெற உள்ள தொடரில், மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.;
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், நாளை மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்க உள்ளது. பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெற உள்ள தொடரில், மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் குரூப்-பி பிரிவில் இந்திய அணி இடம்பெற்று உள்ளது. அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, உகாண்டா ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் இடம்பெற்று உள்ளன. யாஷ் துல் தலைமையில் களமிறங்க உள்ள இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் நாளை மறுதினம் மோத உள்ளது.