மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - 5வது முறையாக ஆஸ்திரேலியா உலக சாம்பியன்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5ஆவது முறையாக ஆஸ்திரேலிய பெண்கள் அணி கோப்பையை வென்றுள்ளது.

Update: 2020-03-08 11:08 GMT
மெல்போர்னில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் அலிசா ஹீலி, பெத் மூனி இருவரும் முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தனர். இறுதியாக 20 ஓவர் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. 185 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சஃபாலி வர்மா 2 ரன்களிலும், ஸ்மிரிதி மந்தானா 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கியவர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 19.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் அதிரடியாக ஆடி 39 பந்துகளில் 75 ரன்கள் குவித்த அலிசா ஹீலி, ஆண்கள் அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்