கிரிக்கெட் மைதானத்திற்குள் ஆட்டம் காட்டிய நாய் : சிறிது நேரம் தடைபட்ட போட்டி

போட்டியின் போது சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குள் திடீரென நாய் ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2019-12-15 17:46 GMT
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ்  இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இதனிடையே, போட்டியின் போது மைதானத்திற்குள் திடீரென நாய் ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பணியாளர்கள் நாயை துரத்த யார் கையிலும் சிக்காமல் , சிறிது நேரம் அது ஆட்டம் காட்டியது. பின்னர் தானாகவே நாய் மைதானத்தில் இருந்து வெளியேறியது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

Tags:    

மேலும் செய்திகள்