ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை அணி முதல் வெற்றி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் சென்னை அணி, முதல் வெற்றியை பதிவு செய்தது.;

Update: 2019-11-26 02:57 GMT
சென்னை நேருவிளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் 23-வது லீக் போட்டியில் சென்னையின் எப்.சி அணி 2-க்கு, 1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் எப்.சி. அணியை வீழ்த்தியது. போட்டியின் இரு பாதியிலும், இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் சென்னை வீரர்கள் ஆண்ட்ரே ஷெம்பிரி, வால்ஸ்கிஸ் ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்து அணியை வெற்றிபெற செய்தனர்.  தமது 5-வது போட்டியில் விளையாடிய சென்னை அணி,  நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
Tags:    

மேலும் செய்திகள்