இந்தியா Vs வங்கதேசம் முதல் டி-20 போட்டி : வங்கதேச அணிக்கு 149 ரன்கள் இலக்கு
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி -20 போட்டியில் இந்திய அணி 148 ரன்கள் எடுத்துள்ளது.;
டெல்லியில் நடைபெறும் இந்த போட்டியில், வங்கதேச கேப்டன் மஹமதுல்லா பந்து வீச்சை தேர்வு செய்தார், இதனையடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் தொடக்கத்தில் இருந்தே தவறான ஷாட்களை ஆடி சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்தனர், நிதானமாக ஆடிய தவான் 41 ரன்கள் குவித்தார், இறுதியில் சுந்தர், குருணால் பாண்டியா அதிரடி காட்ட இந்தியா 20 ஒவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு148 ரன்கள் எடுத்தது, தற்போது வங்கதேச வீரர்கள் 149 ரன் இலக்கை நோக்கி விளையாடி வருகின்றனர்...