பிரதமர் மோடியுடன் பி.வி.சிந்து சந்திப்பு

உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த பி.வி.சிந்து, பிரதமர் மோடியை சந்தித்தார்.

Update: 2019-08-27 10:02 GMT
உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த பி.வி.சிந்து, பிரதமர் மோடியை சந்தித்தார். டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரதமர் மோடியிடம் தான் வென்ற தங்க பதக்கத்தை காண்பித்து சிந்து வாழ்த்து பெற்றார். இது குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த சிந்துவை சந்தித்தது மகிழ்ச்சியான தருணம் என்றும், அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்