மகளிர் கால்பந்து உலக கோப்பையை வென்ற அமெரிக்கா : வெற்றி விழாவில் மகளிர் அணிக்கு பாராட்டு

மகளிர் கால்பந்து உலக கோப்பையை அமெரிக்கா வென்றதை அடுத்து, நியூயார்க் நகரத்தில் வெற்றியை கொண்டாடும் விதமாக விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

Update: 2019-07-11 05:54 GMT
மகளிர் கால்பந்து உலக கோப்பையை அமெரிக்கா வென்றதை அடுத்து, நியூயார்க் நகரத்தில் வெற்றியை கொண்டாடும் விதமாக விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த இந்த விழாவில், அமெரிக்க கால்பந்து மகளிர் அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஞாயிறு அன்று நெதர்லாந்து அணியுடனான இறுதி போட்டியில், இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில், அமெரிக்கா வெற்றிபெற்றது. மகளிர் கால்பந்து உலக கோப்பையை, அமெரிக்கா வெல்வது இது 4வது முறையாகும். இந்த விழாவில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்