இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் : வலுவான நிலையில் இங்கிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது.

Update: 2018-09-10 13:41 GMT
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 114 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற ஸ்கோருடன் இங்கிலாந்து அணி 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் குக் சதம் விளாசினார். கேப்டன் ரூட்டும் அரைசதம் கடந்தார். இதனால் 
இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்துள்ளது. இது இந்திய அணியின் ஸ்கோரை விட 283  ரன்கள் கூடுதலாகும். 
Tags:    

மேலும் செய்திகள்