இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டி : துப்பாக்கி சுடுதலில் இந்தியா முதல் பதக்கம்

இந்தோனேசியாவில் நடைபெறும் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியா முதல் பதக்கத்தை கைப்பற்றியது.

Update: 2018-08-19 08:55 GMT
இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில்  நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரவிக்குமார், அபூர்வி சந்தேலா ஜோடி வெண்கலம் வென்றது. இறுதிச் சுற்றில் 429.9 புள்ளிகளை பெற்று நூலிழையில் வெள்ளிப் பதக்கத்தை தவறவிட்டது.

நீச்சல் போட்டி : இந்திய வீரர்கள் இறுதிச் சுற்றுக்கு தகுதி



இதேபோல் ஆடவருக்கான 200மீட்டர் பட்டர்பிளே நீச்சல் போட்டியில் இந்திய வீரர் சாஜன் பிரகாஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். 100மீ Back stroke பிரிவில் இந்திய வீரர் நட்ராஜ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

 மகளிர் கபடி போட்டி : இந்தியா  அபாரம் 



இதே போன்று மகளிர் கபடி போட்டி லீக் சுற்றில் ஜப்பான் அணியை 43-12 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி பந்தாடியது.




 


Tags:    

மேலும் செய்திகள்