இந்திய ஒருநாள் போட்டிகளின் முதல் கேப்டன் காலமானார்
பதிவு: ஆகஸ்ட் 16, 2018, 04:28 PM
இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் முதல் கேப்டனான அஜித் வடேகர் உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் உயிரிழந்தார். அஜித் வடேகர், 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 2 ஆயிரத்து 113 ரன்கள் குவித்துள்ளார். பத்ம ஸ்ரீ, வாழ்நாள் சாதனையாளர் விருது, அர்ஜுனா விருது உள்ளிட்ட இந்தியாவின் உயரிய விருதுகளை பெற்றுள்ளார். அவரது மறைவிற்கு, பிரதமர் மோடி, இரங்கல் தெரிவித்துள்ளார்.