ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடர் - ஸ்பெயின் வீரர் நடால் சாம்பியன்
பதிவு: ஆகஸ்ட் 13, 2018, 05:13 PM
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக நட்சத்திர வீரர் நடால் வென்றார். கனடாவின் டொராண்டோவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், கிரிஸ் நாட்டின் STEPHANOS -ஐ எதிர்கொண்ட ஸ்பெயின் வீரர் நடால், 6க்கு2,7க்கு6 என்ற நேர் செட்  கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக கைப்பற்றினார்.

மகளிருக்கான ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் -  ஹாலேப்  சாம்பியன்
மகளிருக்கான ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை உலகின் முன்னணி வீராங்கனையான ஹாலேப் கைப்பற்றினார். கனடாவின் மாண்டிரில் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸை எதிர்கொண்ட ருமேனியா வீராங்கனை ஹாலேப், 7க்கு6,3க்கு6,6க்கு4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.