ரசிகர்களை கவரும் தோனியின் புதிய ஸ்டைல்

விதவிதமான ஹேர் ஸ்டைலில் கலக்கும் தோனி;

Update: 2018-07-12 09:39 GMT
கிரிக்கெட் உலகை தனது அதிரடி பேட்டிங்கால் கட்டுப்படுத்திய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு, அவரோடைய ஹேர் ஸ்ட்லைக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர். நீண்ட தலை முடியுடன் தொடக்க காலத்தில் தோனி கிரிக்கெட் உலகில் நுழைய, அவரை ரசிக்காத மனிதர்களே இருக்கு முடியாது 2005ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, தோனியின் அதிரடி ஆட்டத்துக்கு அப்போதைய பாகிஸ்தான் அதிபர் முஸ்ரஃப்பும் ரசிகர். வெளிப்படையாகவே தோனியிடம் தயவு செய்து இந்த ஹேர் ஸைட்லை மாற்றிவிடாதீர்கள் என்று கோரிக்கை வைத்தார். அதன் பின் தன் நீண்ட முடியை வெட்டிக் கொண்ட தோனி, புது, புது ஹேர் ஸ்ட்லை வைத்து கொள்ள, அதனை பின்பற்ற இளைஞர்கள் போட்டி போட்டனர். இதனால் தோனி மீது பாலிவுட் சினிமாவே பொறாமை கொண்டது.இப்படி அடிக்கடி ஹேர் ஸ்ட்லை மாற்றிக் கொண்ட தோனி,  டை அடிக்காமல் சால்ட் அண்ட் பெப்பர் லூக்கில் வந்தும் கலக்கினார்.. சமீபத்தில் தனது 37வது பிறந்தநாளை கொண்டாடிய தோனி, வெள்ளை தாடியுடன் விளையாடினார். இயற்கையை ஏற்றார் போல் தோனி மாறி கொண்டார். ஆனாலும் வயசானாலும், அவருடைய ஸ்டைல் மாறவில்லை என்று தோனியின் புது லூக்கை கண்டு ரசிக்கிறார்கள் அவரது ரசிகர்கள்
Tags:    

மேலும் செய்திகள்