பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் : காலிறுதி முந்தைய சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி
பதிவு: ஜூன் 02, 2018, 04:19 PM
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார்.  பாரீஸ் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ராபர்டோ பட்டிஸ்டாவை எதிர்கொண்ட அவர் 6க்கு4, 6க்கு7, 7க்கு6,6க்கு2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 3 மணி நேரம் 48 நிமிடம் வரை நீடித்தது.