தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய இறைவரை பிரார்த்திப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விஜயகாந்துடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் விஜயகாந்த் விரைவில் பூரண குணம் பெற்று இல்லம் திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.