முதல்முறையாக அரசியல் நிகழ்வில் தோன்றிய டிடிவி மனைவி.. புருவம் உயர்த்தி பார்க்கும் களம்

Update: 2024-03-31 09:30 GMT

தேனி தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா, முதல் முறையாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடி அருகே உள்ள பொட்டிபுரம், ராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் டிடிவி தினகரனின் மனைவி அனுராதா பிரசாரம் செய்தார். அனுராதாவிற்கு கிராம மக்கள் ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்குள்ள கோவிலில் அனுராதா சாமி தரிசனம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்