பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்..மலர் தூவி பல்வேறு அரசியல் கட்சியினர் மரியாதை

Update: 2024-04-19 11:48 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தினத்தந்தி அலுவலகத்தில், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 11வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது அங்கு தொண்டர்களுடன் வந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை சூட்டி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து வருகை தந்த காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தும், சிவந்தி ஆதித்தனாரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்