கொடி பிடித்த பெண்களுக்கு பாஜக பண விநியோகம்.. தீயாய் பரவும் வீடியோ

Update: 2024-04-12 08:59 GMT

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே பாஜக வேட்பாளர் பரப்புரையின் போது கொடி பிடித்து வந்த பெண்களுக்கு பணம் வழங்கும் வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து பாஜக பிரமுகர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி, கூட்டணி கட்சியினருடன் ஆரம்பாக்கம் பஜார் பகுதியில் வாக்கு சேகரிக்கும் போது பாஜக கொடி ஏந்திய சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாஜக நிர்வாகி ஒருவர் ரூபாய் நோட்டுகளை அள்ளிக் கொடுத்த காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பரவியது. இந்நிலையில், பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் பணம் விநியோகித்த நொச்சிக்குப்பத்தை சேர்ந்த பாஜக பிரமுகர் குமார் என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

=

Tags:    

மேலும் செய்திகள்