"ரூ.300 கோடி - மீண்டும் வெடித்த பெகாசஸ் சர்ச்சை" - சுப்பிரமணியன் சுவாமி சாடல்=
பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் தொடர்பாக வெளியான கருத்துகளை மத்திய அரசு தவறென நிரூபிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார்.;
பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் தொடர்பாக தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கருத்துகளை மத்திய அரசு தவறென நிரூபிக்க வேண்டும் என மாநிலங்களவை எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மக்களின் 300 கோடி ரூபாய் வரிப்பணத்தில் பெகாசஸ் உளவு மென்பொருள் வாங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதாக கூறி உள்ளார்.
பெகாசஸ் விவகாரத்தில் நாடாளுமன்றத்தையும், உச்சநீதிமன்றத்தையும் மத்திய அரசு தவறாக வழிநடத்தி இருப்பது ஊர்ஜிதமாகிறது என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.