"அமர்ந்தபடியே தேசிய கீதம் பாடினார்" - மம்தா மீது பாஜகவினர் புகார்

தேசிய கீதத்தை அவமதித்ததாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது, பாஜகவினர் மும்பை போலீஸில் புகாரளித்துள்ளனர்.;

Update: 2021-12-02 10:26 GMT
தேசிய கீதத்தை அவமதித்ததாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது, பாஜகவினர் மும்பை போலீஸில்  புகாரளித்துள்ளனர். அதில், புதன்கிழமை மும்பைக்கு வந்த மம்தா பானர்ஜி, கூட்டம் ஒன்றில் பங்கேற்றபோது, அமர்ந்து கொண்டே தேசிய கீதம் பாடியதாகவும், சில வரிகள் பாடியவுடன் அதை நிறுத்திவிட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர். தேசிய கீதத்தை அவமதித்தை ஏற்க முடியாது என கூறியுள்ள மும்பை பாஜகவினர், மம்தா மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரளித்து உள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்