"கோவை மாவட்டத்தை புறக்கணிக்கவில்லை" - அமைச்சர் சக்கரபாணி
கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படவில்லையெனவும், அனைத்து அமைச்சர்களும் கோவை மாவட்டத்தில் ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.;
கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படவில்லையெனவும், அனைத்து அமைச்சர்களும் கோவை மாவட்டத்தில் ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கோவையில் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி வழங்கும் திட்டத்தை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் 234 தொகுதிகளிலும் அனைத்து திட்டங்களும் சென்று சேர வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளதாக கூறினார். எந்த மாவட்டத்தையும் புறக்கணிக்கவில்லை எனவும் முதல்வர் கோவை மாவட்டத்திற்கு அதிகமான நிதியை கொடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.