புதுச்சேரி அரசியலில் கூட்டணி குழப்பம் ? திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம்

புதுச்சேரியில் தி.மு.க. மேற்கொண்டுள்ள பணிகளை கூட்டணி பிரச்சினை என குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2021-01-19 13:50 GMT
புதுச்சேரியில் தி.மு.க. மேற்கொண்டுள்ள பணிகளை கூட்டணி பிரச்சினை என குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். 

புதுச்சேரியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் - திமுக கூட்டணியில் 5 ஆண்டுகால ஆட்சி சுமூகமாக சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்படும், போராட்டங்களில் திமுக பங்கேற்காமல் தவிர்த்து வருவதும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதனிடையே, புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், திமுக தனித்துப் போட்டியிட வேண்டுமென நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், புதுச்சேரியில், திமுகவை, வலுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். தற்போது அங்கு நடைபெற்று வருவது கழக பணிகள் தான் என்றும் தேர்தல் பணிகள் அல்ல என குறிபிட்டுள்ளார். புதுவை சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் தேர்தல் அறிவிப்பு வெளி வர வில்லை என்றும், இதனை கூட்டணியுடன் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்