"பிரபாகரன் வழி தவறியதால் அனுதாபம் குறைந்தது" - துரைமுருகன் கேள்விக்கு செம்மலை பதில்

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வழி தவறிய போது தான், அதிமுகவுக்கு அவர் மீது இருந்த அனுதாபம் குறைந்தது என அதிமுக எம்.எல்.ஏ. செம்மலை தெரிவித்துள்ளார்.;

Update: 2020-01-07 21:00 GMT
இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், திமுக ஆட்சி காலத்தில், விடுதலை புலிகளை கைது செய்தும், பிரபாகரனின் தாயார் சிகிச்சைக்காக சென்னை வந்தபோது அவரை அனுமதிக்காமல் தடுத்து விட்டு, தற்போது, இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவில்லை என திமுக போராடுவதாக குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், போர் என வந்தால் சில உயிர்களை இழக்கத்தான் நேரிடும் என குறிப்பிட்ட அவர், பிரபாகரன் ஒரு தீவிரவாதி என ஜெயலலிதா விமர்சித்ததை சுட்டிக்காட்டி இதற்கு செம்மலையின் பதில் என்ன என கேள்வி எழுப்பினார். 
 
அதற்கு பதிலளித்த செம்மலை, பிரபாகரன் நல்ல வழியில் போன போது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் ஆதரித்தார்கள் என குறிப்பிட்ட அவர், வழி தவறிய போது தான், அதிமுகவுக்கு அவர் மீது இருந்த அனுதாபம் குறைந்தது என பதிலளித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்