"தர்பார் சிறப்பு காட்சி - இதுவரை அனுமதி கோரவில்லை" - அமைச்சர் கடம்பூர் ராஜூ
"படத்தில் யாருக்கு வாய்ப்பு - தயாரிப்பாளரின் முடிவு";
தர்பார் பட சிறப்பு காட்சிக்கு இதுவரை படக்குழு தரப்பில் இருந்து அனுமதி கோரப்படவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், படத்தில் உள்நாட்டு இசைக்கலைஞர்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்ற விவகாரத்தில் அரசு தலையிட முடியாது எனவும், அதனை தயாரிப்பாளர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.