தொடங்கியது பா.ஜ.க. - சிவசேனா இடையிலான உரசல்

ஆட்சியாளர்கள் அதிகார ஆணவத்தை காட்டியதன் எதிரொலி தான் தேர்தல் முடிவாக வந்துள்ளதாக சிவசேனா அதிகாரப்பூர்வ ஏடான சாம்னா, சட்டப்பேரவை தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ளது.;

Update: 2019-10-25 10:37 GMT
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. மற்றும் சிவசேனா 164 மற்றும் 124 தொகுதிகளில் போட்டியிட்டன. இந்த தேர்தலில் இரண்டு கட்சிகளும் சேர்ந்து 161 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இது கடந்த தேர்தலை விட 25 இடங்கள் குறைவாகும். இந்நிலையில், தேர்தல் முடிவு வந்த மறுநாளே கூட்டணியில் உரசல்கள் வெளிக்காட்டத் தொடங்கி உள்ளன. சட்டப்பேரவை தேர்தல் முடிவு குறித்து சாம்னா இதழில் வெளியான கட்டுரையில், ஆட்சியாளர்களின் அதிகார ஆணவத்தின் வெளிப்பாடு தான், தேர்தல் முடிவில் எதிரொலித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் திரண்டு வந்து வாக்களிக்க உள்ளதாக பா.ஜ.க. நடத்திய பேரணியால் எந்த பலனும் தேர்தலில் கிட்டவில்லை என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. மேலும் எதிர்க்கட்சிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி, எதிர்கட்சிகளை உடைத்து சிதறடித்து வெற்றி பெற்று விடலாம் என்ற கொள்கைக்கு மக்கள் சரியான தீர்ப்பை வழங்கி உள்ளதாகவும் சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளை தேர்தல் அரசியலில் இருந்து ஒழிக்க முடியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்