மாநில பா.ஜ.க. தலைமை அலுவலமாக மாறிய ஆளுநர் மாளிகை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி ஆளுநர் மாளிகை, மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகமாக செயல்படுவதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.;
காமராஜ் நகர் இடைத்தேர்தல் முடிந்தவுடன் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கதை முடிந்து விடும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். காமராஜர் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து கிருஷ்ணா நகரில் இன்று வீடு, வீடாக சென்று கூட்டணி கட்சி தலைவர்களுடன் கை சின்னத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி வாக்குகளை சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரின் வெற்றி உறுதியாகிவிட்டதாக தெரிவித்தார். என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இடைத்தேர்தலில் ரவுடிகளை வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாகவும், ஆளுநர் மாளிகை, மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகமாக செயல்படுவதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.