மாநிலங்களவை பாஜக தலைவராக தாவர் சந்த் கெலாட் நியமனம்

மாநிலங்களவை பாஜக தலைவராக மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-06-12 01:45 GMT
மாநிலங்களவை பாஜக தலைவராக மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர் சந்த் கெலாட் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த கெலாட், தலித் சமூகத்தை சேர்ந்தவர். 71 வயதாகும் கெலாட் மக்களவை , மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். முந்தைய ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த  அருண் ஜெட்லி, மாநிலங்களவை பாஜக தலைவர் பொறுப்பை வகித்தது, குறிப்பிடத்க்கது.
Tags:    

மேலும் செய்திகள்