காங்கிரஸ் ஆட்சி ஊழலில் தி.மு.க.வுக்கு பங்கு - சரத்குமார் விமர்சனம்
கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழலில் திமுகவுக்கு பங்கு இருப்பதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விமர்சித்துள்ளார்.;
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து அகஸ்தீஸ்வரம் பகுதியில் திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார். ஸ்டாலின் சட்டப் பேரவைக்கு முறையாக வருவதில்லை என்றும், அப்படியே வந்தாலும் பொறுமை இல்லாமல் வெளிநடப்பு செய்து விடுவார் என்றும் சரத்குமார் கூறினார்.